இந்தியா
பிரிட்டானியா அறிமுகம் செய்த ஸ்னாக்ஸ்.. ஒரே வருடத்தில் ரூ.100 கோடி விற்பனை..!

பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா புதிதாக ஒரு ஸ்நாக்ஸ் அறிமுகப்படுத்தி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பொருளை விற்பதற்கு மீண்டும் மீண்டும் விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் அந்த பொருளை கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கும்போது பிரிட்டானியா ஒரு புதிய ஸ்நாக்ஸை அறிமுகப்படுத்தி அதை ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டானியா நிறுவனம் உலகம் முழுவதும் தனது உணவு பொருள்களை விற்பனை செய்து வருகிறது என்பதும், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் பிஸ்கட்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மேற்கத்திய ஸ்னாக்ஸ் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் Treat Croissant என்ற ஸ்னாக்ஸ். இந்த ஸ்னாக்ஸ் அறிமுகம் செய்த ஒரு வருடத்திலேயே 100 கோடி ரூபாய் விற்பனை என்ற இலக்கை எட்டி உள்ளது.

#image_title
இந்த ஸ்நாக்ஸை பிரிட்டானியா நிறுவனம் தனது சொந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதாகவும் மேற்கத்திய உணவாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பிடிக்கும் வகையில் சில சுவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்னாக்ஸ் வர்த்தகத்தில் தொடர்ந்து தங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் Treat Croissant அறிமுகம் செய்ததில் அறிமுகம் செய்ததிலும் அதில் கிடைத்த வெற்றியும் உங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உலக தரம் வாய்ந்த இந்த ஸ்னாக்ஸ் தற்போது இந்தியர்களுக்கு மலிவான விலையில் நாங்கள் கொடுத்து உள்ளோம் என்றும் இன்னும் இதே போன்ற ஸ்நாக்ஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே மேற்கத்திய உணவுகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் பிரிட்டானியா நிறுவனத்திடம் இருந்து இன்னும் சில மேற்கத்திய ஸ்னாக்ஸ் வகைகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.