ஆரோக்கியம்

மார்பகங்களில் அரிப்பா? என்ன காரணம்? குணப்படுத்துவது எப்படி?

Published

on

பெண்களில் ஒரு சிலருக்கு மார்பகத்தில் அரிப்பு ஏற்படும் என்பதும், அவர்கள் மறைவான பகுதியில் நின்று சொரிந்து கொண்டு இருப்பதை பலர் கவனித்திருக்கலாம். மார்பகங்களில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்? இதை குணப்படுத்த என்ன செய்யவேண்டும்? என்பதை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பயன்படுத்திய பிராவை மீண்டும் பயன்படுத்துவது தான். ஏற்கனவே பயன்படுத்திய பிராவில் பாக்டீரியா அல்லது வைரஸ் இருக்கலாம். அதை மீண்டும் துவைக்காமல் அணிவதால் மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு மிக அதிகம்.

அதுமட்டுமின்றி பிராக்கள் போன்ற உள்ளாடைகளை கண்டிப்பாக சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டு அதன் பிறகு சோப்பு போட்டு நன்றாக அலச வேண்டும். அதேபோல் பிராவை துவைத்தவுடன் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரா எதில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காட்டன் துணியில் தயாரிக்கப்பட்ட பிராக்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிந்தெட்டிக் நூல் என்று கூறப்படும் செயற்கை இழைகளால் தயாரான பிராக்கள் கண்டிப்பாக மார்பகத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி மார்பகத்திற்கு சரியான அளவில் பொருந்தும் பிராக்களை உபயோகப்படுத்த வேண்டும். இறுக்கமாக உள்ள பிராக்களை பயன்படுத்தினால் அரிப்பு உள்பட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சோப்பு போட்டு அலசி குளிக்க வேண்டும். மர்ம உறுப்புகளில் மார்பகங்களையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் ஓய்வில் இருக்கும்போது பிரா இல்லாமல் நைட்டி அல்லது பிளவுஸ் அணிந்து கொள்ளலாம். அதனால் மார்பகங்களுக்கு காற்று செல்லும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேற்கண்ட வழிகளை கடைபிடித்தால் கண்டிப்பாக மார்பகத்தில் எந்த பிரச்சனையும் வராது.

Trending

Exit mobile version