இந்தியா

ரூ.21,000 வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்.. அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி!

Published

on

கோடிக்கணக்கில் வருமானம் பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ.21,000 வரி செலுத்தாததால் அரசு அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ஐஸ்வர்யா ராய், அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு பல்வேறு வகைகளில் கோடிக்கணக்கில் வருமானம் வரும் நிலையில் அவர் வெறும் ரூ.21,000 வரி கட்டவில்லை என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மும்பையில் பல வீடுகள் மற்றும் நிலங்கள் சொந்தமாக இருக்கும் நிலையில் அவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயம் அல்லாத நிலம் ஒரு ஏக்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு அவர் ரூ.21,960 வரி செலுத்தவில்லை என அந்த பகுதியில் தாசில்தார், ஐஸ்வர்யாராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தாசில்தார் கூறிய போது ஐஸ்வர்யா ராய் பச்சன் ஜனவரி 9ஆம் தேதிக்குள் ரூபாய் 21,000 வரி செலுத்தாத காரணத்தினால் அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பணம் செலுத்த அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தோம். ஆனால் எங்களுக்கு இரண்டு நாட்களில் பணம் செலுத்துவோம் என்று ஐஸ்வர்யாராயிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு வழக்கமான நடவடிக்கை தான், அவருக்கு மட்டுமல்ல, நாங்கள் வரி செலுத்த தனிநபர் நபர் மற்றும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கோல் என்ற பகுதியில் ஐஸ்வர்யாராய் ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் இருப்பதாகவும் ஆனால் இந்த நிலத்தில் அவர் விவசாயம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மார்ச் 31 வரை வரி செலுத்துவதற்கு கால அவகாசம் இருந்தாலும் வழக்கமான நோட்டீஸ் அனுப்பப்படும் என்ற வகையில் தான் ஐஸ்வர்யா ராய் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1200 ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரூ.21,000 பணம் என்பது ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதால் அவர் இன்னும் ஒரிரு நாளில் அந்த பணத்தை கட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version