தமிழ்நாடு

கருப்பு புடவை: வானதி சீனிவாசனை விளையாட்டாக வம்பிழுத்த விஜயதாரணி!

Published

on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

#image_title

தமிழக காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழக சட்டசபைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சுவாரஸ்யமாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையில் வந்திருந்து காங்கிரஸ் கட்சியினரையே வியப்பாக பார்க்க வைத்தது.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டமன்றத்திற்கு இன்று சாதாரணமாக கருப்பு புடவையில் வந்தார். அவர் வரும்போது, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும் கருப்பு புடவையில் சட்டமன்றத்தில் நின்று கொண்டிருந்தார். அதனை பார்த்த பின்னர் தான் வானதி சீனிவாசனுக்கு காங்கிரஸ் போராட்டம் குறித்து தெரியவந்தது.

இதனையடுத்து விஜயதாரணி எம்எல்ஏ விளையாட்டாக வானதி சீனிவாசனை பார்த்து, என்ன மேடம் நீங்களும் ஆதரவா என்று கேட்டார், இதை எதிர் பார்க்காத வானதி சீனிவாசன், சிரித்தபடியே நான் அதுக்காகலாம் வரலங்க என்று பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதே கேள்வியை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விளையாட்டாக எழுப்பினார்.

Trending

Exit mobile version