ஆரோக்கியம்

தோல் தடிப்பைக் குணமாக்கும் கருமிளகு!

Published

on

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்லது. கருமிளகு டீக்குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்க்கவும்.இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து இதைப் பருகலாம்.

சிறிதளவு மிளகை இடித்து, நீரில் கொதிக்க வைத்த பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும். இது இருமல் சிகிச்சையில் நல்ல சுவாசத்திற்கு உதவுகிறது. இருமல், சளி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் மிக நல்ல மருந்தாக உள்ளது.

இது உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதால் உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, எல்லாவித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது. இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

மிளகு பொடியுடன் அருகம்புல் சிறிதளவு சேர்த்து, நீரில் கொதிக்க வைத்த குடித்தால் பூச்சிக் கடி காரணமாக ஏற்படும் தோல் தடிப்பு, அரிப்பு போன்றவை குணமாகும்.

மிளகு பொடியுடன் உப்பு சேர்த்து பல் தேய்த்தால் பல் கூச்சம், பல் சொத்தைப் போன்றவை குணமாகும். பல் நோய்களுக்கு மிளகுடன் கல் உப்பு சேர்த்து பொடியாக்கி பல் துலப்பிளால் நிவாரணம் கிடைக்கும்.

பசும்பாலுடன் 10 பூண்டு பற்பளை சேர்த்துக் கொதிக்க வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கடத்து குடித்தால் நெஞ்சுச்சளி விலகும்.

மிளகைப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் இருமல் உடனே நிற்கும். 10 துளசி இலைகளுடன் 5 மிளகு, நீர் கொதிக்க வைத்த குடித்தால் கோழைக்கட்டு நீங்கும்.

மிளகைப் பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் போன்ற உறுப்புகள் நன்றாக இயங்கும்.

Trending

Exit mobile version