தமிழ்நாடு

நாளை கோவை வரும் கவர்னருக்கு கருப்புக் கொடி: எங்கே போய் முடியுமோ?

Published

on

நாளை கோவை வரும் தமிழக கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீது கருப்புக்கொடி காட்டப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி கொடி பதாகை வீசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து அதிமுக, பாஜக ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் இது குறித்து அமித்ஷாவிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்வதற்காக நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் கோவைக்கு வருகை தரும் ஆளுனருக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்புக் கொடி காட்டிய எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் செல்லுமிடமெல்லாம் கருப்புக்கொடி காட்டும் நிலைமை ஏற்பட்டு வருவதை அடுத்து என்ன ஆகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version