இந்தியா

மதமாற்ற திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை…. பாஜகவின் தேர்தல் அறிக்கை…

Published

on

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. ஒருபக்கம், இரண்டு கட்சிகளும் அதை செய்வோம், இதை செய்வோம் என தேர்தல் அறிக்கைகளை வெளியிட துவங்கி விட்டனர்.

bjp

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதை இன்று வெளியிட்டனர்.

அதில், மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஹோலி, தீபாவளியன்று இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும், 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு பொதுப்போக்குவரத்தில் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version