தமிழ்நாடு

எடப்பாடியை அசிங்க படுத்தியவரை.. கட்சியில் இருந்து தூக்கிவிட்டு.. மறுநாளே மீண்டும் சேர்த்த பாஜக

Published

on

சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.பாலகணபதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து உள்ளார்.

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக அதிமுகவிற்கு செல்ல தொடங்கி உள்ளது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி மீது கோபம் அடைந்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி ஒரு படி மேலே எடப்பாடி உருவபொம்மையை எரித்தார்.

இதையடுத்து தினேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. இது தொடர்பாக பாஜக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய கொள்கை. முரணாக ஜனதா செயல்பட்டதாலும், கட்சியின் கட்சியின் தூத்துக்குடி வடக்கு தலைவர் அனைத்து குறிக்கோள்களுக்கு நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் மாவட்ட பாரதிய ஜனதா திரு.தினேஷ் ரோடி கட்சியின் இளைஞர் அவர்கள் தற்போது அணி மாவட்ட வகித்தும் வரும் பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்., என்று கூறப்பட்டது.

தற்போது இவரை மீண்டும் கட்சியில் சேர்த்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து திரு தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது., என்று கூறப்பட்டு உள்ளது,

Trending

Exit mobile version