இந்தியா

வாக்கு எண்ணிக்கையில் திடீர் திருப்பம்.. காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் பரபரப்பு

Published

on

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு மாநிலங்களிலும் முன்னிலையில் இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இதே முன்னிலை கடைசிவரை தொடர்ந்தால் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் ஆம்ஆத்மி 12 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக வும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது/ இருப்பினும் இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version