சினிமா செய்திகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிக்பாஸ் அனிதா சம்பத்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் இவர் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்த போதிலும் ஆரியுடன் மோதியதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் அனிதா சம்பத், நடிகர் விமல் நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கும் பாலசரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் விமல் அண்ணன் அவர்களுடன் அனிதா சம்பத் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை மார்ட்டின் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில்தான் நடிக்க இருப்பது குறித்து மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விமல் மற்றும் அனிதா சம்பத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version