சினிமா செய்திகள்

கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்: அவரே அளித்த கேலியான பதில்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார் என்பது தெரிந்ததே. இதனால் அவருக்கு ஆர்மிகள் கூட தொடங்கப்பட்டன. ஆனால் ஆரியிடம் திடீரென அவர் மோதல் போக்கை கடைபிடித்ததால், அதற்கு அடுத்த வாரமே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அனிதா சம்பத், கணவருடன் இணைந்து பல வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார் என்பதும் அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அனிதா சம்பத் கூறும் அழகு குறிப்புகள் பலரை கவர்ந்துள்ளது என்பதால் அவருடைய யூட்யூப் சேனலுகு சப்ஸ்கிரிபர்ஸ் மற்றும் பார்வையாளர்கள் அதிகமாகி வருகிறது என்பதும் அவருடைய சேனல் பிரபலமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென யூட்யூபில் உள்ள ஒரு சேனல் அனிதாவும் அவருடைய கணவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தலைப்புடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவுக்கு கேலியும் கிண்டலும் கூடிய பதிலளித்துள்ளார் அனிதா சம்பத்.

கண்டண்ட் இல்லை என்றால் இந்த லெவலுக்கு இறங்கிவிட்டார்களா? இந்த கிசுகிசு பக்கங்கள். தினமும் நானும் என் கணவரும் யூடியூப் வீடியோக்கள் போடுவதை இந்த சேனலின் அட்மின் பார்த்தது இல்லை போல’ என்று பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version