வணிகம்

சென்னை – புதுச்சேரி இடையில் சரக்கு கப்பல் போக்குவரத்து..!

Published

on

சென்னை – புதுச்சேரி இடையில் அண்மையில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் விரைவில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சரக்கு கப்பல்களில் கொண்டு வரும் கண்டெய்னர்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்னை துறைமுகத்திலிருந்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று டிராப்பிக் அதிகரிப்பது தொடர் கதையாக உள்ளது.

Bi-Weekly cargo service via sea between Chennai and Puducherry

அதனை குறைக்கும் விதமாகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் கடல் வழியாகக் கப்பல் மூலம் கண்டெய்னர்களை எடுத்துச் சென்று, அங்கு இருந்து பிற இடங்களுக்கு கண்டெய்னர்களை பிரித்து அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் கடலூர், சேலம், திருச்சி மற்றும் பிற பகுதிகளிலிருந்து சாலை வழியாகச் செல்லும் கன்டெய்னர்கள் குறையும். சென்னை சாலைகளில் டிராப்பிக் நெரிசல் குறையும்.

அடுத்த ஒரு சில வாரங்களில் 67-மீ நீளமுள்ள எம்வி ஹோப் செவன் கப்பல் மூலமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் என இந்த சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

Trending

Exit mobile version