சினிமா செய்திகள்
இத்தனை வருடங்கள் ஆகியும் பாலாவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை: முத்துமலர் வீடியோ வைரல்

இத்தனை வருடங்களாகியும் பாலாவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என அவரது மனைவி முத்து மலர் பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் பாலா ஆகிய இருவரும் ஒரே ஆண்டில் தான் திருமணம் செய்தனர் என்பதும் அதே போல் ஒரே ஆண்டில் தங்கள் மனைவியை விவாக ரத்து செய்வதாக அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் பாலா மற்றும் முத்துமலர் ஆகிய இருவரும் சட்டரீதியாக பிரிந்துவிட்ட நிலையில் பாலாவின் மனைவி முத்துமலர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது அதில் சில ஆண்டுகள் அவர் வாயைத் திறந்து எதுவுமே சொல்ல மாட்டார். அதற்கு எனக்கு சில ஆண்டுகள் ஆனது. நானாகவே புரிந்துகொண்டு எல்லாருக்கும் பிடித்த மிகச் சிறந்த இயக்குனர் அவர் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய வரம். எனவே சில விஷயங்களை அவருக்காக சாக்ரிஃபைஸ் செய்துதான் ஆகவேண்டும். இப்பொழுது அவரை முழுமையாக புரிந்து கொண்டுள்ளேன். இவரிடம் எந்த நடிகர் வந்தாலும் அவரை மோல்ட் பண்ணி நடிக்க வைத்து விடுவார். அது தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி’ என்று கூறியுள்ளார்.