உலகம்
பப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.!

புது டெல்லி : ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா மற்றும் சகோதரியை கொன்ற குற்றத்திற்காக அதே குடும்பத்தை சேர்ந்த 19 வயது மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றதற்கு, அவர் சொன்ன கரணம் தான் அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

பப்ஜி கேம்மிற்கு அடிமையான சுராஜ், படிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேரமும் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். ஆவேசம் அடைந்த பெற்றோர் அவனை கடுமையாக கண்டித்துள்ளனர்.
ஆத்திரம் அடைந்த சுராஜ், நேற்று இரவு தந்தை, தாய் மற்றும் அவரின் சகோதரி உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து தன் பெற்றோரை கொன்றுவிட்டதாகப் புகார் அளித்துள்ளார். சுராஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்குபிடி விசாரணை நடத்திய பொது சுராஜ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
கேம் விளையாட இடையூறுக இருந்ததற்கு, ஆத்திரத்தில் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்த சுராஜ்ஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


















