இந்தியா

ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Published

on

திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய ஆன்-லைனில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை , தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுக்கள் மே 24 முதல் அதாவது இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் இருப்பினும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு தகவல் அவர்களுடைய மொபைல் எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பின்னர் பக்தர்கள் பணம் செலுத்தினால் போதும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பதி கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு வீட்டிலிருந்தபடியே பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் அதற்கான டிக்கெட்டுகள் நாளை அதாவது மே 25ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version