சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த அசுரன் ஹீரோ: வேற லெவல் தகவல்!

Published

on

சிவகார்த்திகேயன் படத்தில் அசுரன் படத்தின் ஹீரோ இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நடித்து வருகிறார் என்றும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் ராஷிகன்னா சத்யராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரை படத்தின் தெலுங்கு ரீமேக் படமான அசுரன் படத்தின் ஹீரோவான வெங்கடேஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நாயகியின் தந்தையாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் தந்தையாக சத்யராஜ் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன் முதலாக தமன் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Trending

Exit mobile version