Connect with us

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (01/08/2021 முதல் 07/08/2021 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வெள்ளி

**********************************************************************************************************************************************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். 

பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மேலிடம் அனுசரணையாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது  நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். 

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மையை தராவிட்டாலும்  உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. 

பரிகாரம்: நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த வாரம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். 

பரிகாரம்: கன்னி பெண்கள் 9 பேருக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுத்து உபசரிக்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன் – வெள்ளி

**********************************************************************************************************************************************************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். 

பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன் – வெள்ளி

**********************************************************************************************************************************************************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். மாணவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். 

பரிகாரம்: சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி

**********************************************************************************************************************************************************************************************************************

கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

இந்த வாரம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  செயல்திறமை கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய் – வெள்ளி

**********************************************************************************************************************************************************************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். 

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய் – வியாழன்

**********************************************************************************************************************************************************************************************************************

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
வேலைவாய்ப்பு15 mins ago

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 mins ago

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்40 mins ago

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

nayanthara
கேலரி56 mins ago

காதலரோடு சாமி தரிசனம் செய்த நயன்தாரா – தீயாய் பரவும் புகைப்படங்கள்….

தமிழ்நாடு60 mins ago

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு1 hour ago

சி விஜயபாஸ்கரை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

poonam bajwa
கேலரி1 hour ago

எங்க வேணா பாத்துக்கோ..என்ன வேணா சொல்லிக்கோ!…பூனம் பாஜ்வாவின் மிரட்டல் கவர்ச்சி…

சினிமா செய்திகள்1 hour ago

இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன்: நாடியா சாங்

உலகம்2 hours ago

கொரோனாவை வென்று மின்சாரத்திடம் தோற்ற சீனா: சரியும் பொருளாதாரம்!

தமிழ்நாடு2 hours ago

ஜோசப் விஜய் எனும் நான்” : மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ9 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ9 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!