உலகம்

300 மில்லியன் ஊழியர்களை வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு: அதிர்ச்சி சர்வே

Published

on

உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை முழுவதுமாக இந்த செயற்கை நுண்ணறிவால் கையகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

#image_title

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை என்றும் கூறப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அலுவலக நிர்வாகத்தில் 46%, சட்ட தொழிலில் 44% மாற்றப்படும் என்றும் இந்த துறையில் உள்ளவர்கள் பலர் வேலை இழப்பார்கள் அல்லது புதியதாக வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 1940 ஆம் ஆண்டு இருந்த வேலைகளை விட தற்போது 60% புதிய வேலைகள் அதிகரித்து உள்ளது என்றும் எனவே இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்றாலும் வேலை வாய்ப்புகளும் இந்த துறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொழில்நுட்பம் புதிதாக அறிமுகம் செய்யும்போது சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

Trending

Exit mobile version