தமிழ்நாடு

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்.. நீதிபதிகள் கேள்வி!

Published

on

அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசுக்கு எதிரான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பருவ தேர்வுகள், இறுதி ஆண்டு மாணவர்களை தவிரப் பிறருக்கு ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ உடன் கலந்தாலோசிக்காத தமிழக அரசு, இந்த பேரிடர் கால தேர்வு ரத்து விதிமுறையானது அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அண்ணா பலகலைக்கழகம், ஏஐசிடிஇ கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதை அடுத்து தமிழக அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம். அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பட்டடை எடுக்க முடியாது. ஏற்கனவே பொறியியல் படித்த மாணவர்கள் வேலையில்லாமல் உணவு டெலிவரி வரை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 20-ம் தேதி வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version