பிற விளையாட்டுகள்

குரோஷியாவின் அரையிறுதி கனவு தகர்ப்பு.. அடுத்தடுத்து கோல்போட்டு அசத்திய அர்ஜெண்டினா!

Published

on

உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய இரண்டு அணிகள் மோதின.

முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா அணியை 6 முறை அரையிறுதிக்கு சென்ற அர்ஜென்டினா அணி மோதியதை அடுத்து அர்ஜென்டினா அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்றே போட்டிக்கு முன்பே கணிக்கப்பட்டது.

அதன்படியே நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆவேசமாக கோல் அடிக்க முயற்சி செய்தனர் என்பதும் குரோஷியா ஆரம்பம் முதலே தடுப்பாட்டம் விளையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நிலையில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று குரோஷிய அணி அதிக நிமிடங்களை வேஸ்ட் செய்தது.

இந்த நிலையில் போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி சாதுரியமாக கோல் அடித்து தனது அணிக்கு ஒரு கோலை போட்டுத் தந்தார். அதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஜுவாலியன் ஆல்வரிஸ் என்பவர் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததை அடுத்து முதல் பாதியில் அர்ஜென்டினா 2 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

முதல் பாதிக்கு பின்னர் அர்ஜென்டினா தடுப்பாட்டம் விளையாட குரோஷியா ஆவேசமாக கோல் அடிக்க முயற்சித்தது. இருப்பினும் 69 ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க குரோஷிய அணி வீரர்கள் தளர்ந்து போனார் என்பது தான் உண்மை. இறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து முதல் முறையாக இறுதிக்குள் நுழையலாம் என்ற குரோஷியாவின் கனவு தகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு அர்ஜெண்டினா அணி தகுதி பெற்ற நிலையில் அர்ஜென்டினா ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று மதியம் நடைபெறவுள்ளது. 3வது இடத்திற்கான போட்டி டிசம்பர் 17ஆம் தேதியும் இறுதிப்போட்டி டிசம்பர் 18ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version