இந்தியா
தாஜ்மஹால் உள்ளே சிவாலயம் இருப்பது உண்மையா? தொல்பொருள் துறையினர் தகவல்

தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது குறித்து தொல்பொருள் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்
உலகப் புகழ்பெற்ற அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை உள்நாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பெறுபவர்களும் பார்த்து ரசித்துள்ளனர். இந்த கட்டிடத்தின் இன்றைய மதிப்பு 7500 கோடி என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும், இந்து சாமியார்கள் உள்ளே சென்று பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பாஜக எம்பி ஒருவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியபோது படி தாஜ் மஹாலின் உள்ளே 22 அறைகள் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று அங்கு நீண்ட ஒரு நடை போய் மட்டுமே இருப்பதாகவும் வாரம் ஒரு முறை சுத்தம் செய்யப் படுவதாகவும் தெரிவித்தார்
மேலும் தாஜ்மஹாலின் உள்ள எந்தவிதமான கடவுள்களின் சிலைகளும் இல்லை என்றும் முகலாய கட்டிடக்கலையில் அடித்தளத்தில் காலியான அறைகள் கட்டப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் தெரிவித்துள்ளனர்