டிவி

அதட்டிய அர்ச்சனா.. கண் கலங்கிய பாலா!

Published

on

பிக்பாஸ் வீட்டில் நேற்று வீட்டைக் கூட்டிப் பெருக்குவதில் பாலாஜிக்கும், அர்ச்சனாவுக்கு ஆரம்பித்த சண்டை இன்றும் தொடருகிறது.

கலைப்பாக உள்ளது என்று உறங்கிக்கொண்டு இருந்த பாலாவை பார்த்துக் கடுப்பான அர்ச்சனா, இவனை ஏதாவது செய்ய வேண்டும் என்பது போல, வீட்டைக் கூட்டிப் பெருக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

ஹவுஸ் கீப்பிங் அணி கேப்டன் வேல் முருகனை அழைத்து வீட்டை சுத்தம் செய்யுங்கள் என்று கூறுகிறார். அதற்கு வேல்முருகன் இரவு லைட் ஆப் செய்யும் போது தானே செய்வோம் என்று கூற இப்போதே செய்யுங்கள். உங்கள் அணியில் அனைவரையும் அழைத்துக் கூட்டி பெருக்கங்கள் என்று கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல், வேல் முருகன் பாலாவை எழுப்ப முயல, அவர் தூங்கிக்கொண்டு இருப்பது போலவே இருக்கிறார். சரி என்ன செய்வதென்று வேல் முருகன், ரமேஷ் மற்றும் ஷிவானி உள்ளிட்டவர்கள் வீட்டை கூட்டி பெருக்குகின்றனர். ஆனால் பாலா வராததைச் சுட்டிக்காட்டி எழுப்பச் சொல்கின்றனர். அப்போது ஆஜித் பாலாவை எழுப்புகிறார். உடம்பு முடியவில்லை. நான் காலையில் பெருக்குகிறேன் என்று கூறுகிறார்.

அர்ச்சனா, ரியோ இருவரும் கூட்டி பெருக்க உதவுவது போல பாலாவை பற்றி குறை கூறாஅரம்பிக்கின்றனர். தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா என்று வேல்முருகனை உசுப்பி விடுகின்றனர். இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எழுந்து வரும் பாலா, நான் வீட்டு தலைவராகும் போது இவர்களை அம்மி அரைக்க வைக்கின்றேன் எஙிறார். அதன் பிறகு ஆரம்பித்த பிரச்சினைகளை நேற்று பார்த்தோம்.

அந்த பிரச்சினையே இன்றும் தொடருகிறது. இன்றைய ப்ரோமோவில், பாலாஜி கூறியதை அழகு பழித்து ஏதோ அர்ச்சனா பேசுகிறார்.

கேப்டன் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு கேப்ட்டனை பிடிக்கவில்லை என்கிறார் பாலாஜி.

இவர் வேலை செய்யாமல் இருந்தாலும் எதுவும் சொல்லிவிடக் கூடாது. இவர் எதாவது சொன்னால் நாங்கள் அடிமை போல கேட்க வேண்டுமா என்பது போல அர்ச்சனா நடிக்கிறார். பின்னர் ரியோ அர்ச்சனா, ரியோ இருவரும் பாலாஜியை டார்கெட் செய்கின்றனர். உனக்கு பிடித்து இருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் நான் சொல்வதை கேட்டுதான் ஆக வேண்டும். என்று சொல்லிச் செல்கிறார் அர்ச்சனா.

கடுப்பான பாலாஜி, கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து கண் கலங்குகிறார். பாலாவுக்கும் யாரும் ஆதரவு அளிப்பது போலவும் தெரியவில்லை. அடுத்த ப்ரோமோ அல்லது இன்றை நிகழ்ச்சியில் பாலாவுக்கு பிக்பாஸ் விட்டில் உள்ளவர்கள் யாரவது ஆதரவு அளிக்கிறார்களா என்று பார்ப்போம்.

Trending

Exit mobile version