டிவி
பாலாவுக்கு சப்போர்ட் செய்து அசிங்கப்பட்ட அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டின் விவாதம் போட்டியின் முதல் ப்ரோமோவில் பாலா, சனம் எதிரான வழக்கு விவாதிக்கப்பட்டது.
அதில் பாலாவுக்கு ஆதரவாக அர்ச்சனா உள்ளிட்டவர்கள் நின்று ஆதரித்தனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் சனம் – சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
அதில் சனத்திற்கு ஆதரவாகப் பாலா, ஆரி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்கள் நின்றனர். சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவாக ரியோ, அர்ச்சனா, ஷிவானி, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் நின்றுள்ளனர்.
சனம் ஷெட்டி யாராவது பேசும் போது, நடுவில் வந்து பேசுவார்கள் என்று சுரேஷ் சக்கரவர்த்தி குற்றம் சாட்டுகிறார். நடுவில் வந்து பேசக்கூடாது என்று சொல்வது அவர்கள் கருத்தைச் சொல்லக் கூடாது என்று தடுப்பது போல உள்ளது என்று பாலா சனத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார்.
சுரேஷூக்கு ஆதரவாகப் பேசும் ஷிவானி, ஆரி நீங்கள் பேசும் போது உங்கள் இடைநிறுத்தினார். அதற்கு நீங்கள் கடுப்பானீர்கள் என்றார். பின்னர் இந்த வழக்கு சுரேஷ் – சனம் இடையிலானது, அவரவர் தனிப்பட்ட பிரச்சினைகள் இங்கு முன்வைக்கக் கூடாது என்று விவாதத்தில் கூச்சல் நிலவ, சைலன்ஸ் என்று நீதிபதி சுச்சித்ரா கூறுகிறார்.
அடுத்த கட்டில், பாலாஜியை சூழ்ந்துகொண்ட ஷிவானி, அர்ச்சனா, உனக்கு ஆதரவாகப் பேசிய எங்களுக்கு எதிராக, சனத்துக்கு ஆதரவாக நீ நின்றது எங்களை முட்டாள் ஆக்கியது போல உள்ளது கூறுகின்றனர்.
அதற்குப் பாலா நான் கேம் விளையாடுகிறேன், யாரு தோல்வி அடைவது போல இருக்கிறார்களோ, அவர்களை வெற்றி அடையச் செய்வது தான் கெத்து என்று கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே சொல்கிறார். இன்றைய இரண்டாவது ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.