வீடியோ

இதுவரை இல்லாத மிரட்டல், பிரம்மாண்டம் ‘அரண்மனை 3’ ட்ரெய்லர்!

Published

on

அரண்மனை 1, 2-ல் இல்லாத பிரம்மாண்டத்துடன் அரண்மனை 3 உருவாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் எதிர்ப்பாக்கப்பட்டு வரும் படம் அரண்மனை 3. முதல் இரண்டு பாகங்களில் இல்லாத பிரம்மாண்டம் மற்றும் பொருட் செலவில் இந்த படம் உருவாகியுள்ளது.

அக்டோபர் மாதம் அரண்மனை 3 திரை அரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. அரண்மனை 1, 2 பாகங்களுக்குச் சிறுவர்கள் அதிக ரசிகர்களாக உள்ளனர். அதை இன்னும் இந்த படம் அதிகரிப்பது போல ட்ரெய்லர் உள்ளது.

ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாகு, மனோ பாலா, வேல ராமமூர்த்தி, மது சூதன் ராவ், வின்சண்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், பேபி ஓவி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சி சத்யா இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

அரண்மனை – 3 ட்ரெய்லர்

YouTube video player

Trending

Exit mobile version