ஆரோக்கியம்
ஆப்பிள் Vs பேரிக்காய்: எது அதிகம் ஆரோக்கியம்? எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
Published
6 மாதங்கள் agoon
By
Poovizhi
ஆப்பிள் Vs பேரிக்காய்: எது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது?
ஆப்பிளும் பேரிக்காயும் உலகளவில் பரவலாக விரும்பப்படும் பழங்கள். உடல் எடை குறைப்பு, இதய நலம், செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இரண்டும் சிறந்த தீர்வாக உள்ளன. ஆனால் இந்த இரண்டிலும் எது அதிக நன்மை தரும் என்ற சந்தேகம் எப்போதும் அனைவருக்கும் இருக்கும்.
கலோரிகள் மற்றும் கார்ப்ஸ்:
ஒரு மீடியம் ஆப்பிளில் 95 கலோரி, பேரிக்காயில் 101 கலோரி உள்ளது. கார்போஹைட்ரேட் ஆப்பிளில் 25 கிராம், பேரிக்காயில் 27 கிராம். இரண்டும் கொழுப்பில்லாதவை மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளவை.
நார்ச்சத்து:
நார்ச்சத்து அதிகம் வேண்டும் எனில் பேரிக்காய் சிறந்தது. ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. ஆப்பிளில் 4 கிராம் தான். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
ஆண்டிஆக்ஸிடன்ட் மற்றும் பாலிபினால்:
ஆப்பிளில் ஆண்டிஆக்ஸிடன்ட் மற்றும் பாலிபினால் அதிகம். இது செல்களை பாதுகாக்க, நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். பேரிக்காயில் இதுபோல் குறைவாகவே இருக்கும்.
விட்டமின்கள் மற்றும் மினரல்கள்:
ஆப்பிளில் 11% விட்டமின் சி, பேரிக்காயில் 10%. பொட்டாசியம் இரண்டிலும் இருக்கிறது, இரத்த அழுத்தத்திற்கு உதவும். பேரிக்காயில் விட்டமின் K, காப்பர், ஃபோலேட் அதிகம், இது இரத்தம் உறைதல், சிவப்பு ரத்தசேல்கள் உற்பத்திக்கு உதவும்.
புரோட்டீன் மற்றும் கொழுப்பு:
இரண்டும் 1 கிராம் புரோட்டீன் கொண்டவை. எனவே பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சர்க்கரை மற்றும் எடை குறைக்கும் நோக்கில் சிறந்தவை.
நுட்பமான தீர்வு:
செரிமானத்திற்கும் நார்ச்சத்திற்கு பேரிக்காய்.
ஆன்டிஆக்ஸிடன்ட் தேவைப்பட்டால் ஆப்பிள்.
இரத்த அழுத்தம், பொட்டாசியம் இரண்டிலும் இருப்பதால் இரண்டும் சிறந்தது.
எடை குறைப்பு, நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க இரண்டையும் மாறி மாறி சாப்பிடலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














