வணிகம்

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!

Published

on

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது என்பதும் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்களின் மூலம் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11, 12, 13 மற்றும் 14 மாடல்களை இந்தியாவில் தயாரிக்கிறது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஐபோன் 14 தயாரிக்கும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்களும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகளின் மூலம் ஐபோன்கள் தயாரிப்பில் இறங்கியது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டிய முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெருமையை ஆப்பிள் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஸ்மார்ட் போன் உற்பத்தி ஏற்றுமதி ரூ.10,000 கோடியை எட்டி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் செய்த இந்த சாதனை உலக அளவில் பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னணி ஊடகம் ஒன்றின் அறிக்கையின்படி 2027 ஆம் ஆண்டு உலக அளவில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டில் ஒன்றை இந்தியா தயாரித்திருக்கும் என்று கூறியது. அ அதேபோல் 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் மொத்தமுள்ள ஆப்பிள் ஐபோன்களில் 25 சதவீதத்தை இந்தியா தயாரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கணிப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Trending

Exit mobile version