Connect with us

தமிழ்நாடு

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில்லும், அதில் கிளம்பியுள்ள சில சந்தேகங்களும்!

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன் படி சரியாக ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். ஆனால் தற்போது அதில் சில சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.

#image_title

பாஜக தலைமையகாமன கமலாலயத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களை தெரிவித்தார். என்னுடைய ரஃபேல் வாட்ச் பெல் & ரோஸ் நிறுவனத்தினுடையது. இந்த வாட்சை தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பெல் & ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த ஃபிரெஞ்சு நிறுவனம்.

மொத்தமே தயாரிக்கப்பட்ட 500 வாட்சுகளில் 147-வது வாட்ச் ஆகும் இது. நான் இந்த வாட்சை 2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இந்த வாட்சை இனிமேல் யாரும் வாங்கமுடியாது, இந்த வாட்ச் தற்போது மார்க்கெட்டில் இல்லை என்றார் அண்ணாமலை.

ஆனால் இதில் உலா வரும் சில சந்தேகங்கள்: சேரலாதன் வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394EBI147/500, அண்ணாமலை சேரலாதனிடமிருந்து வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394DAR147.1 இரண்டு வாட்ச் பில் சீரியல் நம்பர்களும் வெவ்வேறாக உள்ளது. சேரலாதன் டைம்ஸ் கடையில் இருந்து வாங்கிய வாட்ச் டெலிவரி செல்லான் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. 4.50 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கும் போது கம்பியூட்டர் பிரிண்ட் டெலிவரி செல்லான் தராமல் பேனாவால் எழுதி கொடுப்பார்களா என பலரும் கூறுகின்றனர்.

மேலும் மொத்தமே 500 வாட்சுகளே தயாரிக்கப்பட்ட ரஃபேல் வாட்சை சேரலாதன் வெறும் இரண்டு மாதங்களில் 1.50 லட்சம் ரூபாய் குறைத்து அண்ணாமலைக்கு ஏன் விற்றார்? முன்னதாக ஒரு பேட்டியில் அண்ணாமலை தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் 149-வது வாட்ச் என கூறியிருந்தார். ஆனால் அவர் சமர்ப்பித்த பில்லில் 147-வது வாட்ச் என கூறப்பட்டுள்ளது. வாட்சுக்கான தொகையை அண்ணாமலை சேரலாதனுக்கு ரொக்கமாக கொடுத்துள்ளார். ஆனால் வருமான வரித்துறை சட்டப்படி 2 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?