தமிழ்நாடு

கருணாநிதி செய்த தவறுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: கச்சத்தீவு குறித்து அண்ணாமலை

Published

on

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த தவறுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தபோது அவரிடம் ஐந்து கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வைத்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒன்று இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து நேற்று கருத்து கூறிய அண்ணாமலை கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக ஆட்சியில் தான் என்றும் தாரை வார்த்தது இந்திரா காந்தி என்றும் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அமைதியாக இருந்துவிட்டு தற்போது கச்சத்தீவுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது மிகப்பெரிய நாடகம் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் கச்சதீவை எப்படி மீட்பது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் தனது தந்தை கருணாநிதி கச்சத்தீவு விஷயத்தில் செய்த தவறுக்கு ஸ்டால்லின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்டால் கச்சதீவை எப்படி மீட்போம் என்பதை அறிவாலயம் சென்று ஸ்டாலினிடம் தெரிவிப்பேன் என்றும் அண்ணாமலை கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version