தமிழ்நாடு

நீங்க எல்லாம் ஜெயலலிதான்னு சொல்லிக்காதீங்க.. அண்ணாமலை கிழி கிழின்னு கிழித்த ஜெயக்குமார்

Published

on

சென்னை; பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார்.

பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

Annamalai

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுகவின் செயலுக்கு எதிர்வினை இருக்கும். நானும் ஷாப்பிங் போவேன். நிர்வாகிகளை பிடிக்க நினைத்தால் நானும் பை பையாக பிடிப்பேன். அதற்கான நேரம் காலம் வரும்.

நான் ஜெயலலிதா, கருணாநிதி மாதிரியான தலைவன். எங்களை நம்பித்தான் அதிமுக இருக்கிறது. திராவிட கட்சிகள் பாஜகவை நம்பி இருக்கின்றன. அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. முன்பெல்லாம் பாஜகதான் திராவிட கட்சிகளை நம்பி இருப்பதாக சொல்லுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது, என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார். அதில், ஜெயலலிதா போன்ற தலைவர் நான் எனக்கூற யாருக்கும் தகுதியில்லை. அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் தாங்க முடியாது. ஒரு கட்சிக்கு மாநில தலைவராக இருப்போர் எல்லாம் அரசியல் தலைவர்களாகிவிட முடியாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியாது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் தேவை . ஜெயலலிதா போன்று தானும் ஒரு தலைவர் என்று யாரும் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஜெயலலிதா போன்ற தலைவர் இனி பிறக்கமாட்டார். மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகவிட முடியாது. அதிமுக பாஜக கூட்டணி தொடரும். அதிமுக கண்ணாடி அல்ல; சமுத்திரம்; அந்த சமுத்திரம் மீது கல்வீசினால் காணாமல் போய்விடும்

கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும்; ஒன்னரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் ஈடுகட்ட முடியாது எந்தக் கட்சியிலிருந்தும் யாரையும் இழுக்க வேண்டிய அவசியம் அதிமுக-வுக்கு இல்லை. பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவதே நல்லது, என்று கூறியுள்ளார்..

Trending

Exit mobile version