தமிழ்நாடு

ஒரு யூடியூப் சேனல்.. 40 ஆயிரம் ரூபாய் கேமிரா.. நீங்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா?

Published

on

ஒரு யூடியூப் சேனல், 4 சப்ஸ்கிரைபர் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கேமராவை வைத்துக்கொண்டு இருப்பர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு பேட்டி எடுக்க வருகிறார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று பாஜக தலைமையகம் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தபோது அவர் காரசாரமான கேள்விகளுக்கு பதிலளித்தார். காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டு குறித்து கூறிய அவர், ‘இது குறித்து கேள்வி கேட்க திமுக மற்றும் திமுகவின் ஆதரவு பத்திரிகைகளுக்கு தகுதியில்லை என்றும் ஒரு மிகப்பெரிய தலைவியை சட்டமன்றத்தில் சேலையை பிடித்து இழுத்தவர்கள் தான் திமுக என்றும், ம் பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும் என்று கூறியவர்கள் திமுகவினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரபேல் வாட்ச் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவர், ‘இந்த வாட்சில் உளவு பொருட்கள் இருக்கிறதா? கேமரா இருக்கிறதா என்று கேட்டார். உடனே அண்ணாமலை தனது வாட்சை கழட்டி அந்த பத்திரிகையாளரிடம் கொடுத்து, ‘உங்களுக்கு நான் 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன், இந்த வாட்சை நீங்கள் எடுத்துக்கொண்டு போங்கள், எங்கே வேண்டுமானாலும் சோதனை செய்யுங்கள். இதில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள். அதன்பிறகு நான் பதில் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள் கேள்வி கேட்கும் போது ஒரு யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு 40 ஆயிரம் ரூபாய் கேமராவை வைத்துக்கொண்டு நீங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு இங்கே வர வேண்டாம் என்றும் பத்திரிகையாளர்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது என்றும் ஒரு எடிட்டர் இருக்கின்றார் என்றும், ஒரு டீம் இருக்கிறது என்றும் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என்றும் ஆனால் யூடியூப் சேனலில் யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இனி அடுத்து வரும் எனது பெட்டிகளுக்கு யூடியூப் சேனல்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஆவேசமாக அண்ணாமலை பதில் கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

Trending

Exit mobile version