தமிழ்நாடு
ஊட்டச்சத்து பெட்டகம் விவகாரம்: அண்ணாமலைக்கு பயந்து வேறு நிறுவனத்திற்கு டெண்டரா?

ஊட்டச்சத்து விவகாரத்தில் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு டெண்டர் கொடுக்க உள்ளதாக அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அண்ணாமலை கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம் பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ஊட்டச்சத்து கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அதற்கான லஞ்சம் கை மாறி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு தமிழக சுகாதாரத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இன்று டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்காட் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை என்றும் ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல்ஸ் என்ற நிறுவனத்திற்கு தான் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பயந்து தமிழக அரசு வேறு நிறுவனத்திற்கு டெண்டரை அளித்ததா? அல்லது தற்செயலாக டெண்டரியல் குறைந்த தொகை தெரிவித்திருந்ததால் ஸ்ரீ பாலாஜி சர்ஜிகல் நிறுவனத்திற்கு டெண்டர் அளிக்கப்பட்டதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.