தமிழ்நாடு

செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு.. அண்ணா பல்கலை. அறிவிப்பு!

Published

on

செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் ஒரு மணி நேரம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, https://aucoe.annauniv.edu/ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் அதாவது பிப். 1 முதல் 17 ஆம் தேதி வரையில் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும். பிப். 18 முதல் மார்ச் 2 வரை அரியர் தேர்வுகள் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுக்காக வரும் 19,30 தேதிகளில் மாதிரித் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடைபெறும். எனவே மாணவர்கள் அதற்குரிய உபகரணங்கள் செல்போன், லேப்டாப், எழுதிப்பார்க்க பேப்பர் தயாராக வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்ப குறைபாடு காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணமாகவோ இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டால், அடுத்த 3 நிமிடங்களுக்குள் தேர்வு தளத்திற்கு வர வேண்டும்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள். எனவே எந்த முறைகேடும் செய்ய முடியாது. தேர்வின் போது மற்ற இணையதளத்திற்குச் சென்றாலோ, மற்றவர்களிடம் கேட்டாலோ கண்டுபிடிக்கப்படும். தேவைப்பட்டால், ஒரு தாளில் எழுதி பார்க்கலாம்.

Trending

Exit mobile version