சினிமா

கவினின் அடுத்தப் படத்தில் அனிருத்?

Published

on

நடிகர் கவினின் அடுத்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘டாடா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து கவின் அடுத்து என்னப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இப்போது அதுகுறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. ’டாடா’ படத்தை அடுத்து நடிகர் கவின் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில்தான் கவின் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தைப் போல, நகரத்துக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில், இந்தப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending

Exit mobile version