இந்தியா

அமேசான், ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமா? இதை செய்தால் கிடைக்கும்!

Published

on

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் அதே போல் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையையும் வழங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் சப்ஸ்கிரிப்டீன் கிடைக்கும் வகையிலும் சில திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 3359 ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் மொபைல் மூலம் பார்க்கும் சப்ஸ்கிரிப்டீன் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இரண்டு விதமான ஓடிடி சப்ஸ்கிரிப்ஸன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 699 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதும் அது மட்டுமின்றி காலவரையற்ற அழைப்புகள் எஸ்எம்எஸ்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைப்பதோடு வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அமேசன் பிரைம் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2999 ரீசார்ஜ் திட்டத்தில் எந்த OTT சந்தாவும் கிடைக்காது என்றாலும் இந்த திட்டத்தில் இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்டாக் கேஷ்பேக் மற்றும் விங்க் மியூசிக் ஆகிய பலன்களும் கிடைக்கும். 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றின் பலனை பெறலாம்.

ஏர்டெல்லின் ரூ. 3359 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டியுடன் தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். மேலும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் ஒரு வருட சந்தா கிடைக்கும். அதுமட்டுமின்றி டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலுக்கான ஒரு வருட சந்தாவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version