தமிழ்நாடு

ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு இதுக்குத்தான் அண்ணாமலை வந்தாரு.. பாய்ந்து வரும் அமர் பிரசாத் ரெட்டி

Published

on

சென்னை: தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள் என்று அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி இனி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதில் பேசிய அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அது எங்களுக்கு அவசியம் இல்லை.

தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கட்சி வளர்ச்சிதான் எங்களுக்கு முக்கியம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம், என்று சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசி உள்ளார்.

இந்த நிலையில் அண்ணாமலை கருத்துக்கு ஆதரவாக அமர் பிரசாத் ரெட்டி பேசி உள்ளார். அதில், தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள்.

ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு.

ஒரு நாளும் ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

திராவிடம் இல்லாத் தமிழகம்; ஊழல் இல்லா தமிழகம். அதுவே எங்கள் உயிர்மூச்சு என்பதே அண்ணாமலையின் தீர்க்கமான முடிவு. தமிழக நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை தொண்டர்களும்; மக்களும் வரவேற்கின்றனர். தொண்டர்கள் விருப்பத்தை வெளிப்படுத்திய தலைவருக்கு கோடானு கோடி நன்றிகள்!

சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம்.

Trending

Exit mobile version