இந்தியா
ஒரு UPI பரிவர்த்தனைக்கு இவ்வளவு கட்டணமா? இனிமேல் கேஷ் தான்..!

UPI பரிவர்த்தனை என்பது தற்போது சின்ன சின்ன பெட்டி கடைகளில் கூட வந்து விட்டது என்பதும் தள்ளுவண்டி கடைகளில் வாழைப்பழங்கள் விற்கும் கடைகளில் கூட UPI வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் தற்போது மொபைல் மூலம் UPI பரிவர்த்தனையில் தான் கிட்டத்தட்ட அனைத்தையும் வாங்கி வருகின்றனர் என்பதும், ரொக்க பரிமாற்றம் என்பது மிகவும் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் கூட தற்போது UPI பரிவர்த்தனை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் UPI மூலம் பரிவர்த்தனை செய்யும் தொகையின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் UPI அறிமுகம் செய்யப்படும்போது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இது இலவசமான சேவை என்றுதான் அறிமுகம் செய்தன. ஆனால் தற்போது ஒரு சில வங்கிகள் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஒன்று ஆறு மாதத்திற்கு 90 பரிவர்த்தனைக்கு மேல் UPI பண பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இரண்டு ரூபாய் கட்டணம் மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டியும் வசூலிப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து 90 பரிவர்த்தனைக்கு மேல் செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.2.26 காசுகள் கட்டணம் வங்கி எடுத்துக் கொள்ளும்
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.26 என்றால் 100க்கும் மேற்பட்ட பரிவர்த்தனை செய்தால் எவ்வளவு வரும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதுமட்டும் இன்றி ஒரு சில வங்கிகள் 40 பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிப்பதாகவும் அதற்கு மேல் செய்யப்படும் ரூ.2.26 பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களுடைய வங்கியை தொடர்பு கொண்டு ரூ.2.26 பரிவர்த்தனைக்கு கட்டணம் உண்டா? அவ்வாறு உண்டு என்றால் எத்தனை பரிவர்த்தனைக்கு இலவச அனுமதி என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் 90 பரிவர்த்தனைக்கு மேல் பரிமாற்றம் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை பழகிக்கொள்ள வேண்டும் என்றும் ரொக்கப் பரிவர்த்தனை தான் பாதுகாப்பானது மற்றும் சிறப்பானது என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
மொபைல் போன் மூலம் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு எல்லாம் தற்போது UPI பரிவர்த்தனை மூலம் செய்யப்பட்டு வருவது குறைக்கப்பட வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் UPI பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.