தமிழ்நாடு
விருந்துடன் காத்திருந்த அழகிரி…. வராமல் டிமிக்கி கொடுத்த ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனது பிரத்யேக நிகழ்ச்சிக்காக மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் மதுரையில் உள்ள தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டுக்கு சென்று அவரை சந்திப்பார் என அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களில் கடைசி வரையிலும் இந்த சந்திப்பு நடக்கவில்லை.

#image_title
முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு சென்றதும் அழகிரியின் வீடு அமைந்துள்ள சத்திய சாய் நகர் மற்றும் அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து அனைத்து வழிகளிலும் இருக்கும் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் சீர்திருத்தப்பட்டன. இதனால் ஸ்டாலின் நிச்சயம் அழகிரியின் வீட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேப்போல மு.க.அழகிரியும் தனது தம்பி நிச்சயம் தனது வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து பிரத்யேகமாக சமையல்காரரை எல்லாம் வரவழைத்து விருந்து தாயர் செய்துள்ளார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் சமையல்காரரிடம் சொல்லி தயார் செய்து அவரை மகிழ்விக்க காத்திருந்துள்ளார் அழகிரி.
ஆனால் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது கடைசி வரையிலும் அழகிரி வீட்டுக்கு செல்லாமல் மதுரையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார் ஸ்டாலின். இதனால் அழகிரி தரப்பு அப்செட் ஆனாலும் அவரை ஃபோனில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது வேலைகள் அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வரமுடியவில்லை என ஸ்டாலின் விளக்கம் அளித்ததாகவும், உடல்நிலை குறித்து இருவரும் விசாரித்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.