சினிமா செய்திகள்

அடுத்த மாதம் அஜித், விஜய் சந்திப்பு? முக்கிய ஆலோசனை நடக்கலாம் என தகவல்!

Published

on

அடுத்த மாதம் அஜித் மற்றும் விஜய் சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது இருவரும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் கசிந்து வருகிறது..

விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

அஜித் 61 படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வருகிறது என்பதும் இந்த செட் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் நடைபெற உள்ளதாகவும், இரண்டு படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் விஜய் சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது இருவரும் மனம்விட்டு சில விஷயங்களை பேசி முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை? அஜித் விஜய் சந்திப்பு நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version