சினிமா செய்திகள்

‘துணிவு’ படத்தின் மாஸ் அப்டேட்டை கொடுத்த போனிகபூர்.. ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

By

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ‘துணிவு’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடி உள்ள நிலையில் இந்த பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். ஜிப்ரான் இசையில் உருவான இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும், போனிகபூர் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களுக்கும் செம கொண்டாட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version