சினிமா
“கனா“ படத்தின் கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் (வீடியோ)
தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தயாரிக்கும் படம் ’கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.

திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டை மையப்படுத்திப் பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் இந்திய படம் இதுவே ஆகும்.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 4 வயது மகளுடன் இணைந்து பாடும் பாடல் வீடியோவை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். லட்சக்கணக்கான ரசிகர்களைச் சென்று சேர்ந்த இப்பாடல் நல்ல வரவேற்பையும் கொடுத்தது. இதைத்தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் அடங்கிய ’ஊஞ்சலா ஊஞ்சலா’ பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
















