வணிகம்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 57% அதிகரிப்பு!

Published

on

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தங்களது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயிலிருந்து 57 சதவீதம் அதிகரித்து 155 ரூபாயாக அறிவித்துள்ளது.

இந்த கட்டணம் உயர்வு முதல் கட்டமாக ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும் சோதனை ஓட்டமாக அமலுக்கு வந்தது.

99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு அழைப்பு மேற்கொண்டால் நொடிக்கு 2.5 பைசா கட்டணமும், 200 எம்பி இணையதள தரவும் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இப்போது இதனை 155 ரூபாயாக அதிகரித்த பிறகு, 1 ஜிபி இணையதள தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 இலவச எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்பட உள்ளது.

விரைவில் இந்த 155 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் மற்றும் இரண்டாவது எண்ணாக ஏர்டெல்லை பயன்படுத்தி வந்தவர்களுக்கு 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மிகப் பெரிய அளவில் உதவி வந்தது.

தற்போது ஏர்டெல்லுக்கு ஒரு பயனரிடம் இருந்து வரும் சராசரி வருவாய் 190 ரூபாயாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த கட்டணம் உயர்வால் ஏர்டெல் வருவாய் 205 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு ஏர்டெல்லில் 28.4 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். 2022-ம் ஆண்டு அதுவே 32.6 கோடியாக அதிகரித்துள்ளது.

போட்டி நிறுவனமான ஜியோவில் 42.23 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். ஒரு பயனரிடம் இருந்து வரும் சராசரி வருவாய் 177.2 ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version