வணிகம்

ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?

Published

on

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில் தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் விமான பயணத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நீண்ட தூர பயணத்திற்கு ரயிலில் சென்றால் நாள் கணக்கில் ஆகும் நிலையில் விமானத்தில் மணிக்கணக்கில் சென்று விடலாம் என்பதால் காலநேரம் மிச்சப்படுகிறது என்ற காரணத்தினால் நடுத்தர வர்க்கத்தினரும் தற்போது விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக விமான நிலைய நிறுவனங்கள் சலுகைகளை அறிவிக்கும் போது ஏராளமான நடுத்தர வர்க்கத்தினர் அதை பயன்படுத்தி விமான பயணம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா தனது 74 ஆவது குடியரசு தினத்தை இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாட இருக்கும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு விமான சேவைக்கான சலுகை டிக்கெட் கட்டணத்டஹி அறிவித்துள்ளது. சற்றுமுன் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை மூலம் ஜனவரி 23ஆம் தேதிக்குள் சலுகை விலைய்ல் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்றும் பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை பயணம் செய்வதற்கான எக்னாமி வகுப்பு டிக்கெட்டுகளை சலுகை விலையில் புக் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா முன்பதிவு தளங்கள், ஏர் இந்தியாவின் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக இந்த சலுகை விலையில் உள்ள டிக்கெட் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,783 ரூபாயில் என்ற நம்ப முடியாத கட்டணத்தில் தொடங்கி 49 உள்நாட்டு பயணங்களுக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கு ரூபாய் 5895 ரூபாய் மட்டுமே என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் சலுகை விலை டிக்கெட்டுகள் கட்டணம் குறித்த விவரங்கள் இதோ:

டெல்லி – மும்பை – ரூ 5,075
சென்னை – டெல்லி – ரூ 5,895
பெங்களூரு – மும்பை – ரூ 2,319
டெல்லி – உதய்பூர் – ரூ 3,680
டெல்லி – கோவா – ரூ 5,656
டெல்லி டூ போர்ட் பிளேயர் – ரூ.8,690
டெல்லி – ஸ்ரீநகர் – ரூ 3,730
அகமதாபாத் – மும்பை – ரூ 1,806
கோவா முதல் மும்பை வரை – ரூ 2,830
திமாபூர் முதல் கவுகாத்தி வரை – ரூ 1,783

 

Trending

Exit mobile version