இந்தியா
ஏர் இந்தியாவில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி.. டாடா தலைவருக்கு கடிதம் எழுதியதால் பரபரப்பு
Published
4 weeks agoon
By
Shiva
டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது போதை ஆசாமி ஒருவர் அந்த பெண்ணின் அருகே வந்து நின்றார். அதன்பிறகு அவர் திடீரென அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி சத்தம் போட்ட போது சக பயணிகள் அந்த போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து அந்த பெண் பயணிக்கு வேறு இருக்கையை ஒதுக்கினர். அவர் அந்த விமானத்தில் மிகவும் அதிருப்தி உடன் பயணம் செய்தார்.
இந்த நிலையில் விமானம் டெல்லியில் தரை இறங்கியதும் எதுவுமே நடக்காததுபோல் விமான பணியாளர்கள் மற்றும் அந்த போதை ஆசாமி நடந்து கொண்டது அந்தப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் விமானம் தரை இறங்கியவுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காத்திருந்த அந்த பையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து டாடா தலைவர் என் சந்திரசேகரன் அவர்களுக்கு அந்த பெண் கடிதம் எழுதினார். நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்தபோது ஏற்பட்ட பயணம் தான் தனக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான பயணம் என்றும் விமான பயணிகளில் ஒருவர் தன் மீது சிறுநீர் கழித்ததை விமான பணிப்பெண்கள் கண்டுகொள்ள இல்லை என்றும் அந்த நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து என் சந்திரசேகர் அவர்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் அந்த போதை ஆசாமிக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறக்க தடை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
You may like
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதித்த ஏர் இந்தியா… என்ன காரணம்?
-
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
-
50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம்.. 10 நாட்களில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்!
-
விமானத்தில் பறக்கும் வேலை.. சம்பளம் ரூ.3 கோடி.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!
-
கேர்ள் ப்ரண்ட் பயணத்தை தடுக்க இளைஞர் செய்த விபரீத செயல்.. சிறையில் கம்பி என்ணும் பரிதாபம்!