தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி: அமித் ஷா திட்டவட்டம்!

Published

on

சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக-பாஜக கூட்டணியில் புயல் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது பேசியுள்ளார்.

#image_title

சில நாட்களுக்கு முன்னர் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தேசிய தலைமை அதிமுக உடன் கூட்டணி வைக்க சொன்னால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேசி கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். ஆனால் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்துவிட்டு வந்த பின்னர், அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை, தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பாஜக கட்டமைப்பு தமிழ்நாட்டில் வலுவில்லாமல் உள்ளது. இதனை சரிசெய்ய கடுமையாக உழைத்து முன்னேற்றம் கண்டுள்ளோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது.

வலுவில்லாமல் உள்ள இடங்களில் எங்கள் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். மேலும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றார். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்பதை திட்டவட்டமாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version