சினிமா செய்திகள்

’அஜித் 61’ தான் நயன்தாராவின் கடைசி படமா? பரபரப்பு தகவல்!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருமணம் குறித்த பணிகளை இருதரப்பு உறவினர்களும் திருப்பதிலேயே தங்கியிருந்து செய்து வருவதாகவும் தெரிகிறது.

மேலும் திருமணத்திற்கு மிகக்குறைவான விருந்தினர் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு வைத்து அதில் தான் திரையுலக பிரபலங்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திருமணத்திற்குப் பின்னர் நயன்தாரா நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 37 வயதாகும் நயன்தாரா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருவதால் அந்த படங்களை முடித்து விட்டு அதன் பிறகு முழுக்க முழுக்க ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

nayanவருடத்திற்கு ஐந்து படங்கள் என்று ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திரைப்படங்களை தயாரிக்க நயன்தாரா முன் வருவார் என்றும், நடிகையை அடுத்து தயாரிப்பாளர் துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கொள்கை என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

Trending

Exit mobile version