தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது: அதிமுகவினர் அதிர்ச்சி!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் உள்பட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 100க்கும் மேற்பட்ட அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைதை கண்டித்து அதிமுகவினர் திமுக அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version