வணிகம்

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோக்கு போட்டியாக புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடங்குகிறாரா அதானி.. உன்மை என்ன?

Published

on

அதானி குழுமம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டல், போட்டியாக புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாகவும், அதற்காக 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அதானி குழுமம் 5 ஜி ஸ்பெக்டர்ம் ஏலத்தில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளது உன்மைதான். ஆனால் அது வாடிக்கையாளர்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்க அல்ல.

அதானி குழுமத்தின் வணிக நிறுவனங்கள், விமான நிலையங்களில் அதானி குழுமத்தின் பணிகளைச் செய்ய தனியாகத் தொலைத்தொடர்பு சேவையை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம் தங்களது வணிகங்கள் அனைத்தையும் இணைத்து சூப்பர் ஆப் சேவை போன்றவற்றை வழங்க உள்ளது. அதற்கு தங்களுக்கு வேகமாகச் செயல்படும் சொந்த தனியார் தொலைத்தொடர்பு சேவை இருந்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டு 5ஜி அலைக்கற்றை பெறத் திட்டமிட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை விற்க ஜூன் 15-ம் தேதி அனுமதி அளித்தது. அதற்கான ஏலம் பணிகள் ஜூலை 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சில நகரங்களில் மட்டும் 5ஜி தொலைத்தொடர்பு சேவையைச் சோதனை அடிப்படையில் வழங்கி வருகின்றன. விரைவில் 5ஜி சேவை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

5ஜி சேவை நாடு முழுவதும் வழங்கப்பட்டால் 4ஜி இணையதள சேவையை விட 5ஜி சேவை 10 மடங்கு வரை கூடுதல் வேகமாக இருக்கம் என தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version