சினிமா செய்திகள்

சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகும் சமந்தா.. என்ன காரணம்?

Published

on

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை சமந்தா, திடீரென சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக அறிவித்து அவரது ரசிகர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமந்த நீண்ட காலமாகவே மையோசிடிஸ் என்ற அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

samantha

அண்மையில் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்த நீண்ட காலமாகச் சிகிச்சையில் உள்ளார். இப்போது அதற்கான மேல் சிகிச்சைக்காகத் தென் ஆப்ரிக்கா செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நோயிற்கான சிகிச்சை முடிந்து குணமாக நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகுகிறேன்.

தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளவற்றிலிருந்து விலகுகிறேன். தனக்காகக் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இரண்டு பாலிவுட் படங்கள் மற்றும் சில தெலுங்கு படங்களிலிருந்து சமந்தா விலகுகிறார்.

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்து வரும் குஷி படத்தில் தான் நடிக்க வேண்டிய சில காட்சிகள் உள்ளதால் அதனை மட்டும் நடித்து முடித்துவிட்டு சிகிச்சைக்காகத் தென் ஆப்ரிக்கா செல்ல சமந்தா முடிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version