சினிமா செய்திகள்

நடிகர் அஜித்தின் 63வது படம்: வெளிவந்த முக்கியத் தகவல்!

Published

on

தமிழ் திரையுலக அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் “துணிவு” வெற்றிப் படத்திற்கு பிறகு, தனது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவித்து இருந்தனர். பட வேலைகளை தொடங்க தயாராகி வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால், படம் கைவிடப்பட்டது.

அஜித்தின் 62வது திரைப்படம்

விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு, அஜித்தின் 62 வது படத்தை இயக்க மகிழ் திருமேனியை தேர்வு செய்தனர். இவர் ஏற்கனவே தடையற தாக்க, மீகாமன், தடம் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ஆனாலும் அஜித் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. கதையை இன்னமும் கொஞ்சம் மெருகேற்றச் சொல்லி இருப்பதனால், படப்பிடிப்புக்கு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது என்கின்றனர்.

63 வது திரைப்படம்

62 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, தற்போது நடிகர் அஜித் நடிக்க உள்ள 63 வது படம் பற்றிய தகவல் வெளி வந்துள்ளது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ் திருமேனி இயக்கும் படத்தை முடித்து விட்டு, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிப்பார் எனத் தெரிகிறது.

Trending

Exit mobile version