சினிமா

டாய்லெட் விளம்பரத்தில் நடித்த அப்பாஸ்.. இப்போ என்ன இப்படியொரு வேலை செய்யுறாரு?

Published

on

By

ஆரம்பத்தில் இருந்தே டபுள் ஹீரோ சப்ஜெக்டில் அதிகம் நடித்து வந்த அப்பாஸ் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போன நிலையில், ஹார்பிக் டாய்லெட் க்ளீனர் விளம்பரத்தில் எல்லாம் நடிக்கும் நிலைக்கு ஆளானார். இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் அப்பாஸ் என தெரிய வந்துள்ளது.

காதல் தேசம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். கதிர் இயக்கத்தில் வினீத், தபு ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த அப்பாஸ், முதல் படத்திலேயே ரசிகைகளை வெகுவாக கவர்ந்தார்.

#image_title

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்த அப்பாஸ், அதன் பின்னர் மார்க்கெட் இழந்து ஆகி சினிமாவில் இருந்தே விலகிவிட்டார்.

தற்போது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அப்பாஸ், பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறாராம்.

விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என பல படங்களில் செகண்ட் ஹீரோவாகவே நடித்து வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், சத்யராஜுடன் மலபார் போலீஸ், மம்முட்டியுடன் ஆனந்தம் படங்களிலும் நடித்திருந்தார். இதனிடையே, காதலுக்கு மரியாதை, ஜீன்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பையும் தனது கவனக்குறைவால் மிஸ் செய்திருந்தார். இதன் காரணமாகவே சீக்கிரமாக திரையுலகில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

#image_title

இதனையடுத்து தனது குடும்பத்துடன் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் செட்டிலாகிவிட்டார் அப்பாஸ். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த அப்பாஸ், கடந்த காலத்தை நினைக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்ததாக அப்பாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பாஸின் மனைவி சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் அவரோ தற்போது ஒரு பைக் மெக்கானிக்காக வேலை பார்த்துக்கொண்டு வாழ்கிறாராம். ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக இருந்த அப்பாஸ் நிலைமை இப்போ இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Trending

Exit mobile version